Sunday, December 11, 2011

ஹம்பாந்தோட்டை விளக்கமறியலில் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Sunday, December 11, 2011
இலங்கை::ஹம்பாந்தோட்டை விளக்கமறியலில் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரே விளக்கமறியலில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹம்பாந்தோட்டை கோத்தமீகம பகுதியில் வைத்து சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசி மூலம் சம்பவக் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தக் காட்சிகளை கண்ணுற்ற மற்றுமொருவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கோத்தமீகம பகுதியைச் சேர்ந்த திருமணமான 47 வயதான ஒருவரே இந்த நிலையில் விளக்கமறியலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment