Sunday, December 11, 2011

இராணுவத்திலிருந்து தப்பி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தேடி வலைவிரிப்பு!

Sunday, December 11, 2011
இலங்கை::பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இராணுவத்திலிருந்து தப்பியோடிய 22 வீரர்களைத் தேடி நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் நிலைய மட்டத்திலும் இராணுவ பொலிஸாரின் உதவியுடன் இவர்களைத் தேடிவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.

இத்தகைய நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரியவரும் பட்சத்தில் 119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது இராணுவ தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி குறிப்பிட்டார்.

இதுதவிர, சிறு குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்ற மேலும் 440 பேர் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறப்பிட்டார்.

No comments:

Post a Comment