Friday, December 30, 2011

சுதந்திர தினத்தன்று மாத்திரமே சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Friday, December,30, 2011
இலங்கை::ஜனவரி மாதம் முதலாம்திகதி சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டப்ளியூ.கொடிப்பிலி வலியுறுத்தினார்.

சுதந்திர தினத்தன்று மாத்திரமே சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அவர் நியூஸ் பெஸ்டுக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது வகைப்படுத்தப்பட்டுள்ள 28 குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

அபராதத்தை செலுத்த முடியாமற் போனவர்கள் மற்றும் சிறு குற்றச் செயல்கள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் தொடர்பில் பொது மன்னிப்பு வழங்கப்படும் போது கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதயில் அமைக்கப்பட்டுள்ள 33 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தொடர்பாக இதன்போது கவனத்திற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment