Friday, December,30, 2011இலங்கை::நான் பதவிக்கு வந்தவுடன் முதலில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெறும் முகமாக இந்தியாவிக்கு விஜயம் செய்தேன். இந்தியாவின் ஒத்துழைப்பு பெறப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகளினதும், ஐக்கிய இராட்சியத்தினதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கவலைப்படவில்லை. இருப்பினும் புலிகளின் கப்பல்களை கடலில் வைத்தே அழிப்பதற்கு
தேவையான முக்கிய தகவல்கள், ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் பெறப்பட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெக்கான் ஹொரொனிக்கள் க்கு அளித்த நேர்முககாணலில் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சீனா பல பாரிய உட்டமைப்பு திட்டங்களுடன் எம்மை அனுகினர். இதில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் அவ் ஒவ்வொரு திட்டங்களையும் முதலில் நாம் இந்தியாவுக்கே வழங்கினோம். ஆனால் பதில் எதுவும் அவர்களிடம் இருந்து பெறப்படவில்லை. பாரிய அம்பாந்தோட்டை துறைமுகம் திட்டத்தையும் நாம் இவ்வாறு வழங்கியிருந்தோம். இதைத்தவிர கொழும்பு துறைமுகம் விரிவாக்கல் தொடர்பாகவும் விளம்பரப்படுத்தினோம். இத் திட்டத்தை மேற்கொள்ளவும் சீனாவே முன்வந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். .
மேலும் அவர் கூறுகையில், புலியினரும், அவர்களது ஆதரவாளர்களும் பிராந்திய சுயாட்சி தொடர்பாக குறிப்பிட்டு வந்தனர். பிரச்சனைகளுக்கு தீர்வாக சுயாட்சி ஒரு போதும் அமையாது. வேற்றுமையிலும் உறுதியான ஐக்கியமே ஒரு தேவையாக இருந்தது. பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைவது, ஜனநாயக சுகந்திரம், சம உரிமை மற்றும் சமவாய்பு ஆகியவை ஆகும். இவற்றுடன் இணைந்து துரித பொருளாதார அபிவிருத்தி வடகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதியிலும் இடம்பெற்று வருகின்றன.
தற்போது வடபகுதியில் 300,000 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம் அப்பிராந்தியங்களின் பாதுகாப்பிற்கே ஆகும். இதைத்தவிர வட பகுதியில் உள்ள இராணுவத்தினர் பல முக்கிய பங்களிப்பை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளல், மிதிவெடி அகழ்வு மற்றம் பாடசாலை உட்பட பொதுக் கட்டிடங்களை மீள்புனரமைத்தல் போன்ற பல நலன்புரி சேவைகளை அங்கு வழங்கி வருகின்றனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment