Monday, December 12, 2011இலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு 4 இல் அமைந்துள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியல் தீர்வுக்காக கிடைக்கப்பெற்ற மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இதனை தமிழ் அரசியல் கட்சிகள் சரிவர பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment