

Monday, December 12, 2011உத்தமபாளையம் : தேனி மாவட்டத்தில் இருந்து 3வது நாளாக இன்றும் சுமார் 30 ஆயிரம் பேர் கேரளா நோக்கி பேரணியாக சென்றனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் தமிழக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசை கண்டித்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து ‘பெரியாறு அணையை மீட்போம்’ என்ற கோஷத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக சுமார் ஒரு லட்சம் பேர் எல்லையை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றிரவு தேனியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி கொண்டு செல்ல முயன்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது.
இந்நிலையில், இன்று காலை தேனி மாவட்டம் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, கோவிந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பெரியாறு அணை நோக்கி புறப்பட்டனர். ஆயிரம் பைக்குகள், 500க்கும் அதிகமான டிராக்டர்களில் அவர்கள் அணிவகுத்து சென்றனர். பெண்கள் கையில் துடைப்பம், செருப்புகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம்மெட்டு அருகே வந்த மக்களை வாகனங்களை குறுக்கே நிறுத்தியும், தடுப்புகள் அமைத்தும் தமிழக போலீ சார் மறித்தனர். இதையடுத்து போலீசாருக் கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென நாலாபுறம் இருந்தும் போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கல்வீச்சில் விழுப்புரம் சரக டிஜஜி அமல்ராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர். சிதறி ஓடிய மக்கள், வனப்பகுதிகளுக்குள் புகுந்து அங்கிருந்து கற்களை வீசினர்.
போலீசாரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நெரிசலில் சிக்கி விழுந்த பெண்களை பலர் மிதித்தபடி ஓடினர். காயமடைந்த பெண்கள் வலி தாங்க முடியாமல் கதறினர். கூட்டத்தினரை போலீசார் விரட்டி விரட்டி அடித்ததால் கம்பம்மெட்டு பகுதியில் சுமார் 3 கி.மீ. தூரம் போர்க்களம்போல் காணப்பட்டது. தடியடியை கண்டித்து, ஆயிரக்கணக்கானோர் கம்பம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏடிஜிபிக்கு எதிராக கோஷம்: மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, ‘‘தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் கேரளாவை சேர்ந்தவர். அவரது உத்தரவின் பேரில்தான் போலீசார் தடியடி நடத்தினர். ஏடிஜிபியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்Õ என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கம்பம், குமுளி பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 6 மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று கூடுதலாக மேலும் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கேரள அரசை கண்டித்து உத்தமபாளையம், தேவாரத்தில் இன்று முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் துவக்கியுள்ளனர். 14ம் தேதி தேனியில் திமுக சார்பில் மனித சங்கிலி, விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. திருமாவளவனும் போராட்டம் அறிவித்துள்ளார். தொடர் போராட்டங்களால் தேனி மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
திமுக எம்எல்ஏ பெட்ரோல் பங்க் எரிப்பு
கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், கேரள மாநிலம் புளியமலையில் உள்ளது. இன்று அதிகாலை நூற்றுக்கும் அதிகமான கேரள கும்பல் உருட்டு கட்டைகளுடன் பெட்ரோல் பங்க்கில் நுழைந்தது. அணையை உடைப்போம், ஜெயலலிதா ஒழிகÕ என்று கத்தியபடி பெட்ரோல் பங்க்கை சரமாரியாக அடித்து நொறுக்கினர். பின்னர் தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்....
மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர் 3- வது நாளாக கேரளா நோக்கி பேரணி இன்றும் 30ஆயிரம் பேர் திரண்டனர்!
உத்தமபாளையம் : முல்லை பெரியாறு அணையை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் 3-வது நாளாக இன்றும் 30 ஆயிரம் பேர் கேரளா நோக்கி பேரணியாக சென்றனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசை கண்டித்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து ‘பெரியாறு அணையை மீட்போம்’ என்ற கோஷத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக சுமார் ஒரு லட்சம் பேர் எல்லையை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. லோயர்கேம்ப் அருகே கேரள கயிறு மில்லுக்கு நேற்று ஒரு கும்பல் தீ வைத்தது. சுற்றுலா பயணிகளுக்கான கேரள சொகுசு மாட்டு வண்டிகளும் எரிக்கப்பட்டன. நேற்றிரவு தேனியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி கொண்டு செல்ல முயன்றவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடந்தது.
இந்நிலையில், இன்று காலை தேனி மாவட்டம் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, கோவிந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பெரியாறு அணை நோக்கி புறப்பட்டனர். ஆயிரம் பைக்குகள், 500-க்கும் அதிகமான டிராக்டர்களில் அவர்கள் அணிவகுத்து சென்றனர். பெண்கள் கையில் துடைப்பம் செருப்புகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கம்பம், குமுளி பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 6 மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று கூடுதலாக மேலும் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கேரள அரசை கண்டித்து உத்தமபாளையம், தேவாரத்தில் இன்று முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் துவக்கியுள்ளனர். 14-ம் தேதி தேனியில் திமுக சார்பில் மனித சங்கிலி, விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. திருமாவளவனும் போராட்டம் அறிவித்துள்ளார். தொடர் போராட்டங்களால் தேனி மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சபரிமலையில் கூட்டம் குறைந்தது
சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், கேரளா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் இருந்துதான் அதிகமான பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். பதற்றம் காரணமாக தற்போது, பக்தர்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலேயே விரதத்தை முடித்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, சபரிமலையில் கூட்டம் குறைவாக உள்ளது.
No comments:
Post a Comment