Monday, December 12, 2011

ரஷ்ய தேர்தலில் முறைகேடா? விசாரணைக்கு அதிபர் உத்தரவு!

Monday, December 12, 2011
மாஸ்கோ : ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரிக்க அதிபர் மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. பல வாக்கு சாவடிகளில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பிரதமர் பதவியில் இருந்து புடின் விலகி, மீண்டும் தேர்தல் நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இது ரஷ்யாவை பலவீனப்படுத்தும் அமெரிக்காவின் சதி திட்டம் என்று புடின் கூறிவருகிறார்.

புடின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை வலியுறுத்தி தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக் கணக்கானவர்கள் நேற்று பேரணி சென்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததா என்று விசாரணை நடத்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். ‘‘எதிர்க்கட்சிகளின் பேச்சு, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோஷங்கள் ஏற்கும்படி இல்லை. ஆனாலும், தேர்தல் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்று பேஸ்புக்கில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment