Tuesday, December 27, 2011

கொழும்பு பேஸ் லைன் வீதியில் வைத்து பெண்ணொருவர் மீது பொலிஸார் பாலியல்: நான்கு பொலிஸார் கைது!

Tuesday, December,27, 2011
இலங்கை::கொழும்பு நாராஹேன்பிட்டி பேஸ் லைன் வீதியில் வைத்து பெண்ணொருவர் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதுடன் அவரிடமிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியையும் கையகப்படுத்திக் கொண்ட நான்கு பொலிஸாரையும் கைது செய்த குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கொழும்பு, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

நரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பீ. சோமரத்ன, பீ. குணரத்ன, டபிள்யூ. மதுசங்க, சிந்தக ஆகிய பொலிஸாரே கைது செய்யபப்ட்டவர்களாவர்.

கடந்த 23 ஆம் திகதி மேற்படி வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் காரை நிறுத்தி அதனைச் சோதனையிடுவது போன்று குறிப்பிட்ட பெண் மீது இந்த மூன்று பொலிஸாரும் பாலியல் தும்புறுத்தலை மேற்கொண்டதுடன் அவரிடமிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியையும் எடுத்துள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கைக்குப் பொலிஸ்மா அதிபர் என். கே. இலங்ககோன் விடுத்த பணிப்புரையையடுத்து குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்

No comments:

Post a Comment