Tuesday, December,27, 2011ராமநாதபுரம்: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரிடம் மனு அளித்தனர். தமிழக கடலோர விசைபடகு நலச்சங்க தலைவர் வேணுகோபால் பொது செயலாளர் போஸ், ஆலோசகர் தேவதாஸ், பாதிரியார் மைக்கேல்ராஜ், வேர்கோடு மீனவ சங்க தலைவர் அருளானந்தம் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்னையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். மேலும் 72கடல் நாள் மீன்பிடிக்க அனுமதி கோரியும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வசதியாக அரசு குத்தகை அடிப்படையில் பெற்றுத்தரவும், 1974 ல் கச்சத்தீவு ஒப்பந்தத்தை அமல்படுத்தவும் கோரினர். மத்திய அமைச்சர்கள் வாசன், ஜெயந்தி நடராஜன், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment