Tuesday, December 27, 2011

இந்திய தேசிய கீதத்திற்கு இன்றோடு நூறு வயது!

Tuesday, December,27, 2011
புதுடெல்லி:நம்நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலிற்கு இன்றோடு வயது நூறு ஆகிறது.

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்த பாடல், இதே நாளில் 1911 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் முதன் முறையாக பாடப்பட்டது .

இந்தியா சுதந்திரமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 24, 1950 - ல், இப்பாடல் நம் நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது.

தேசிய கீதம் சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி மொழிகளில் எழுதப்பட்டது, ஐந்து சரணங்கள் உள்ள இப்பாடலை பாடும் நேரம் 52 வினாடிகள் ஆகும்.

இந்த தேசிய கீத பாடலை 'இந்திய காலை பாடல்' என்று ஆங்கிலத்தில் தாகூர் மொழி பெயர்த்தார். இதற்க்கு, ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளே என்ற நகரத்தில் தாகூரே இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் ஒலிக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியர்கள் அனைவரும் தன்னை அறியாமல் எழுந்து நிற்பதற்கு இப்பாடலின் மகத்துவமே சாட்சி.

No comments:

Post a Comment