Tuesday, December,27, 2011இலங்கை::கொழும்பு ,07, ஏர்னஸ்ட் டீ சில்வா மாவத்தையில் உள்ள ரஷ்ய உயர் ஸ்தானிகராலயத்தில் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவின் அதிகாரியொருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இத் தீ விபத்துச் சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாதுள்ள நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைப்பிரிவினர் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment