Tuesday, December,27, 2011புதுடெல்லி:சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்துள்ளதென இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment