Wednesday,December,28,2011இலங்கை:இந்தியா இலங்கையின் அயல்நாடு மட்டுமல்ல ஒரு உண்மையான நட்பு நாடும் ஆகும். இந்திய இலங்கை நல்லுறவு பல் லாண்டுகாலமாக நிலைத்திருக்கிறது. 1971ம் ஆண்டில் ஜே.வி.பி. இயக்கத்தினர், அன்றைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆயுதப் போராட்டமொன்றை மேற்கொண்ட போது முதன் முதலில் இலங் கைக்கு நாம் உதவி கேட்பதற்கு முன்னரே தனது படைகளை அனுப்பி அன்று பலவீனமாக இருந்த எமது நாட்டின் ஆயுதப் படைகளுக்கு துணை புரிந்து, ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை ஓரிரு தினங்களில் முறியடிப்பதற்கு இந்தியா பேருதவி புரிந்தது.
இந்த முயற்சியின் போது 1971ம் ஆண்டில் இந்திய விமானப்படை வீரர் ஒருவரும் உயிர்தியாகம் செய்தமை இந்தியாவின் தியாக உணர்வுக்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.
அது போன்றே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் 1987ம் ஆண்டில் இந்தியா தனது அமைதிகாக்கும் படையை இல ங்கைக்கு அனுப்பி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வொன்றை ஏற் படுத்துவதற்கு எடுத்த முயற்சி எதிர்ப்பார்த்த அளவு வெற்றியளிக்க வில்லை. இறுதியில் சுமார் 2 ஆயிரம் தங்கள் இராணுவவீரர்களை இழந்த நிலையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கை யில் இருந்து வெளியேறினார்கள்.
இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியமைக்காக அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மீது வஞ்சம் தீர்ப்பதற்காக எல்.ரி.ரி.ஈ யினர் அவரை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் மூலம் தென் னிந்தியாவின் திருப்பெரும்பூர் எனும் இடத்தில் தேர்தல் பிரசாரத் தில் கலந்து கொள்ள வந்த போது ராஜீவ் காந்தியை 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதியன்று படுகொலை செய்தமை இந்தியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவ்விதம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து வரும் இந்தியா, இந்தத் தடவையும் எமது நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உதவி செய்ய முன்வந்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பரிந் துரைகள் நிறைவேற்றப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கி யிருக்கும் உறுதிமொழியைக் கவனத்தில் கொள்வதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மோதல்களால் ஏற்பட்ட வடுக் களை ஆறச்செய்வதற்குமான பல்வேறு ஆக்கபூர்வமான பரிந்துரை களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்டிருக்கும் அறி க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் தகவல்கள், வடமாகாணத்தில் சிவில் நிர் வாகம், வடக்கில் பாதுகாப்புப் படைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கை யின் பரிந்துரைகளை தாம் கவனத்தில் கொள்வதுடன், இவற்றை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொரு வர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா நல்லிணக்க செயற்பாட்டு நடைமுறையில் தொடர்ந்தும் இலங்கை யுடன் இணைந்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதுணை புரியவும் தயாராக இருப்பதாகவும் இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த கால யுத்த வடுக்களை மறந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் இத்தகைய வன்முறைகள் ஏற்படாதிருக்கக்கூடிய வகையில் இலங்கை அரசு தீர்க்கமான நடைமுறைகளை எடுக்குமென்பதில் தனக்கு அசை யாத நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரண த்தை கண்டுபிடித்து அதிகாரப் பரவலாக்கல் என்ற உன்னத செய் முறைக்கு அமைய மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்காக அரசியல் தீர்வொன்றை காண்பதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வின் மூலம் நாட்டில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இருக்கும் வாய்ப்புகளை ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
மோதலை அடுத்து உருவாகிய சூழ்நிலையில் நிலையான சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தலைமைத்து வத்தை வழங்கி மோதல்களுக்கான மூலகாரணங்களை நிவர்த்தி செய்வதற்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை ஆணைக் குழுவின் அறிக்கை அடையாளம் கண்டிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுடன் விரி வான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வொன்றை காண்பதற்கும், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது, அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இவற்றின் நிலைமைகளை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று இந்தியா நம்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறிமுறையொன்றை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நட த்துவது பற்றி இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதது.
thinakaran.lk
No comments:
Post a Comment