Wednesday,December,28,2011இலங்கை:தங்காலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் தண்டனை வழங்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தங்காலையில் பிரி;த்தானிய பிரஜை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது ஓர் பாரதூரமான சம்பவம் எனவும், இது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் ரொபி புலொச் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நீதியை நிலைநாட்டுவதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments:
Post a Comment