Monday, December 05, 2011ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்திற்குப் போட்டியிடத் தாம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்றுவதற்காகவும் கட்சியை ஐக்கியப்படுத்துவதற்காகவும் தாம் தலைமைத்துவத்திற்காக போட்டியிடத் தீர்மானித்ததாக கரு ஜயசூரிய சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் போட்டியிடுமாறு பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தாம் தொடர்ந்தும் அந்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தாம் பதவி நிலைகளை விட ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பதாக கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் காரணமாக தாம் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
எத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், கட்சி தலைமைத்துவத்திற்குப் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்த அனைத்து தரப்பினரதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உறுதியளிப்பதாகவும் தமது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment