Monday, December 5, 2011

6 வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம்

Monday, December 05, 2011
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி, மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐந்து பேரும், இன்று நீதி மன்றத்தில் நிறுத்தப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் மீனவர்கள், விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலால் படகுகளை இயக்க முடியாத சூழலில் இருந்து வரும் மீனவர்கள், தங்கள் மீது, இலங்கை கடற்படையினர் பொய்யான வழக்குகள் பதிவு செய்து, சிறையில் அடைப்பதாக கூறுகின்றனர்.

நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளர்களும், மீன்பிடி சார்புத் தொழிலாளர்கள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலுக்குச் செல்லவில்லை. மீன்பிடித்தொழில் முடங்கியுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல மீனவர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment