Tuesday, December 6, 2011

பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு அநீதியானது-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன்!

Tuesday, December 06, 2011
பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு அநீதியானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிக்கும் வரையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என அரசாங்கம் இடைநடுவில் திடீர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனத்தை முற்று முழுதாக நிராகரிக்கவில்லை எனவும், ஏற்னகவே செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புறச் சக்திகளின் தலையீட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் ஏற்படும் கால தாமதத்திற்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment