Tuesday, December 6, 2011

போலி தங்க கட்டிகளை விற்பனை செய்துவந்த மூன்று சந்தேகநபர்கள் கைது!

Tuesday, December 06, 2011
போலி தங்க கட்டிகளை விற்பனை செய்துவந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி தங்க கட்டிகளை விற்பனை செய்த நபர், ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீண்டகாலமாக இந்த மோசடி நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுவந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் இப்பலோகம மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களிடமிருந்து மேலும் பல போலி தங்க கட்டிகளை பொலிஸார கைப்பற்றியுள்ளனர்

No comments:

Post a Comment