Tuesday, December 06, 2011வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு நேரடியாக விஜயம் செய்வதன் மூலம் இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராகவும் ராஜீவ விஜேசிங்க கடமையாற்றுகின்றார்.
இராணுவத்தினர் மக்களை துன்புறுத்துவதாக எவ்வித முறைப்பாடுகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர், அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் எந்த வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை என ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடைபெறும் சகல நிகழ்வுகளிலும் இராணுவத்தினர் பிரசன்னமாவதாக குற்றம் சுமத்தப்படுகின்ற போதிலும், வவுனியாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளுக்கு தாம் சமூகமளித்ததாகவும் இராணுவத்தினர் அந்த நிகழ்வுகளில் பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment