Thursday,December, 08, 2011இலங்கை: பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தற்போது உயிருடன் இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், விஜயகுமாரணதுங்கவின் தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி ஊடாகவே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை பலர் இளம் தலைவராக அறிந்துக்கொண்டனர். இலங்கையின் அரசியலை மாற்றியமைக்கும் அடையாளமாக கருதப்பட்ட விஜயகுமாரணதுங்க ஜே.வி.பியின் கொலை அரசியலினால் கொலை செய்யப்பட்டார். அதேபோல் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் கொலை செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி என ஜே.வி.பியினர் கருதினர். எனினும் அவர், அந்த கொலை சக்திக்கு அடிப்பணியாது தனது அரசியல் உயிரை பாதுகாத்துக்கொண்டார்.
எனினும் 23 வருடங்களில் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா என்ற அரசியல்வாதியின் தலைமையிலான வன்முறை குழுவினரால் பாரத சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த அரசியல் கொலை கலாசாரமானது ஒரு கட்சிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.
துமிந்த சில்வாவின் அரசியல் வன்முறையானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்த நாள் முதல் ஆரம்பமாகவில்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, வன்முறையின் அடையாளமாகவே இருந்தார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அவரது அரசியல் வன்முறைகளை கண்டிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேல் மாகாண சபைக்கு போட்டியிட்டு, அதிக வாக்குகளை பெற்றவர் துமிந்த சில்வா.
தனது சகோதரரின் ஊடக வலமையமைப்பான ஏ.பீ.சி ஊடக வலையமைப்பு தடைசெய்யப்பட்ட பின்னரே அவர் ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடன் இணைந்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அருகில், ரன்மினிதென்ன என்ற கிராமத்திற்கு அருகில் புலிகளின் ஆயுதாரிகள் இருந்தனர் என்ற செய்தியை பொய்யானது எனக் கூறி, ஏ.பீ.சி ஊடக வலைமைப்பு தடைசெய்யப்பட்டது. அதுவரை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வந்த ஹிரு மற்றும் சூரியன் எப்.எம். ஊடகங்களை தம் வசப்படுத்துவதற்காகவே அரசாங்கம், இந்த தடையை விதித்தது.
துமிந்த சில்வா, ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்ததுடன், ஏ.பீ.சி ஊடக வலைமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. அதன் பின்னர், தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, ஏனைய கட்சிகள் மீது காட்டி பலவந்தப்படுத்தல்களை துமிந்த சில்வா, ஜே.வி.பியின் பக்கம் நோக்கி திரும்பினார்.

புலிகளை தவிர இலங்கையில் அரசியல் கொலைகள் என்ற கொள்கைகளை முன்னெடுத்த சிங்கள கட்சி ஜே.வி.பியாகும். இந்த கொள்கை காரணமாக அதன் பல தலைமைத்துவ பரம்பரைகள் தமது உயிர்களினால் இழப்பீடுகளை செலுத்தினர். எனினும் தமது அரசியலில் இருந்த அந்த அத்தியாயம் குறித்து பகிரங்கமாக பேச ஜே.வி.பி இடமளிக்கவில்லை.
அதேபோல் புலிகள் ஆயுத ரீதியாக பலமிழந்த பின்னர், அந்த அமைப்புக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் சக்திகள் அந்த அமைப்பு முன்னெடுத்த கொலை அரசியல் குறித்து விமர்சிப்பதில்லை.வடக்கில் புலிகளும், தெற்கில் ஜே.வி.பியினரும் மேற்கொண்ட கொலை அரசியல் காரணமாக இரண்டு பகுதிகளை சேர்ந்த பல்வேறு சக்திகள் தமது பாதுகாப்புக்காக ஆயுத அரசியலை தமது கையில் எடுத்தன. இந்த நிலைமையானது இலங்கையின் அரசியலை இராணுவமயப்படுத்த வழிகோலியது என்பது சந்தேகம் இல்லை.

அது மாத்திரமல்ல. கடந்த 4 தசாப்பதங்களாக இலங்கை (unp) அரசாங்கங்களினால், மிகவும் வினைதிறனான வகையில் முன்னேற்றப்பட்ட ஒரு விடயம் அரசியல் கொலைகளாகும். இலங்கை அரசாங்கங்களினால், இந்த காலப்பகுதியில் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை லட்சங்களாக இருக்கலாம். இன்று கைதுசெய்யப்படும் பாதாள உலகத்தினர் மாத்திரமல்ல, வீதிகளில் உறங்கிக் கொண்டிருந்த அப்பாவிகள் கூட, நியாயப்படுத்தப்பட்ட பிரசாரங்கள் காரணமாக கொல்லப்பட்டனர்.
எம்மில் பலர் அரசியலின் போது, எமது சண்டியர் எமக்கு சிறந்தவர் என நினைக்கின்றனர். உதாரணமாக குருணாகல் அரசியல்வாதியான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் சண்டித்தனம், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, அந்த கட்சியினருக்கு சிறந்ததாக இருந்தது. அவரது இந்த சண்டித்தனம் தற்போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மகிழ்ச்சியானதாக இருக்கிறது. எனினும் இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது.
ஜே.வி.பி அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்த போது குமார் ஒரு வீரர். தற்போது தமக்கு சவாலாகியுள்ள குமார் ஒரு பயங்கரவாதி. புலிகளின் கே.பி பயங்கரமான பயங்கரவாதி. எனினும். கே.பி அமைதியாக செயற்படக் கூடிய சிவில் தலைவர். கருணா அம்மான பௌத்த பிக்குகளையும் காவற்துறையினரையும் கொலை செய்த கொலைகார பயங்கரவாதி. அமைச்சர் கருணா சிறந்த தேசப்பற்றுள்ள தலைவர்.
எந்த அரசியல் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளாமலலேயே நாம் வீரர்களை துரோகிகளாகவும் துரோகிகளை வீரர்களாகவும் மாற்றுகிறோம். கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பாடங்கள் குறித்து எவ்விதமான பாரதூரமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் நாம் இதனை செய்கிறோம். ஒரு காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வீரராக இருந்த துமிந்த சில்வா, தற்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வீரராக மாறியுள்ளார். பலரது கருத்துப்படி அவர் ஒரு கொலைக்காரர். ஏதெனும் ஒரு வகையில், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிப்பெற்றிருந்தால், துமிந்த சில்வா, இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் வீரராகவே இருந்திருப்பார்.
விஜயகுமாரணதுங்கவின் கொலைக்கு ஜே.வி.பியே பொறுப்புக் கூறவேண்டும் என்பதை அறியாதவர்கள் எவருமில்லை. எனினும் விஜயகுமாரணதுங்கவின் மனைவியான சந்திரிக்கா இலங்கையின் ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டார். அவர் தனது அரசியல் இருப்பை தற்காத்து கொள்ள ஜே.வி.பியுடன் இணைய தீர்மானித்ததன் பின்னர், விஜயவை கொன்றது ஜே.வி.பி அல்ல எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினரை அவரை கொலை செய்ததாகவும் கூறியிருந்தார். அது மாத்திரமல்லாது 1988 - 1990 ஆம் ஆண்டுகளில், இலங்கை மக்கள் கட்சியை சேர்ந்த சுமார் 200 பேரை கொன்ற ஜே.வி.பியுடன் அதன் அரசியல் கொலைகள் குறித்து எந்த விமர்சனங்களையும் செய்யாது,கூட்டணி வைத்துக்கொண்டார். இது கொலை அரசியல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தளர்வையே காட்டுகிறது. அதேபோல், ஜே.வி.பிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள வாதவிவாதங்களில், அதன் கொலை அரசியல் பற்றி ஒரு
வார்த்தைக் கூட பேசப்படுவதில்லை.அரசியல் கொலைகளை முன்னெடுக்காத ஆயுத குழுக்கள் எதுவும் வடக்கில் இருந்ததில்லை. தெற்கில் உள்ள சிங்கள கட்சிகள் அனைத்தும், தமது அல்லது அரசாங்கத்தினது, ஆயுதப்பலத்தை பயன்படுத்தி கொலை அரசியல் அதாவது நபர்களை கொலை செய்யும் அரசியலை செயற்படுத்தி வருகின்றன.
அரசியல் கலந்துரையாடல் மற்றும் சட்டத்திற்கு பதிலாக அரசியல் வன்முறையை தனது முன்னுதாரணமாக கொண்டுள்ள துமிந்த சில்வாவோ, மேர்வின் சில்வாவோ யாராக இருந்தாலும் (இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களாகவும் இருந்த) தனிப்படுத்த முடிந்த பாத்திரங்கள் அல்ல. துர்பாக்கியங்களை ஏற்படுத்தாத வேர் பிடித்து போன கலாசாரத்தினால், அரச பலத்தில் அணுசரனை வழங்கப்படும் அரசியல் வன்முறைகளுக்கு நிரந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து, இரண்டரை வருடங்கள் கழிந்துள்ள பின்னரும், கொலை அரசியல் எமது சமூகத்தில் வேரூன்டி இருப்பதையும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில், அது வெடித்து சிதறக் கூடிய அச்சத்தையுமே பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை எம் கண்முன் நிறுத்துகிறது. ஒரு காலத்தில் தனது அரசியல் சகாவாகவும் தனது தொழிற்சங்க ஆலோசகராகவும் இருந்த பாரதவின் இறுதிச்சடங்களில் ஜனாதிபதிக்கு கூட கலந்துக்கொள்ள முடியவில்லை என்பது இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
No comments:
Post a Comment