


Sunday, December 25, 2011இலங்கை::தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென் ஆசிய இளைஞர் சமாதான மாநாடு கடந்த 20ம் தகதி முதல் 24ம் திகதி வரை நீர்கொழும்பு டொன் பொஸ்கோ கல்லூரியில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் இந்தியா ,பங்களாதேஷ்,நேபாளம், ப+ட்டான், மாலைதீவு பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இப்படியான பிரந்திய இளைஞர் மாநாடு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்
இந்த சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் ; தங்களது நாட்டு நிலைவரம் அங்கு இடம்பெறும் இளைஞர்களுக்கிடையிலான பரஸ்பர கலந்;துரையாடல் பற்றியும் எடுத்துரைத்தனர்
இதேவேளை இங்கு கலந்து கொண்ட இளைஞர்,யுவதிகள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் விதத்தில் நத்தார் தாத்தா வேடம் ப+ண்டு கலந்து கொண்டவர்களை பரவசப்படுத்தினர்
குலைகலாசார நிகழ்வுகள் ஒவ்வெரு நாட்டு இளைஞர்களால் மேடையேற்றப்பட்டமை இங்கு விசேட அம்சமாகும்
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பிய+ம் பெரேரா உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது
மன்றத்தின் தலைவர் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment