Monday, December 26, 2011

2 சர்ச்சில் குண்டுவெடிப்பு 27 பேர் உடல் சிதறி பலி!

Monday,December,26,2011
அபுஜா : கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, நைஜீரியாவில் 2 சர்ச்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். தலைநகர் அபுஜாவை அடுத்த மடலா என்ற இடத்தில் உள்ள செயின்ட் தெரசா சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்புப் பிரார்த்தனை நடைபெற் றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட நிலையில் சர்ச்சுக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 27 பேர் பலியானதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த குண்டு வெடிப்பு நடந்த ஓரிரு மணி நேரத்தில், ஜோஸ் நகரில் உள்ள மவுன்டெய்ன் ஆப் பயர் அன்ட் மிராக்கிள்ஸ் சர்ச் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒரே ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment