


Monday,December,26,2011சென்னை : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். கவர்னர் மாளிகையில் பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் ஜெயலலிதா இரவு 7.20 மணிக்கு சந்தித்து பேசினார். சந்திப்பு 40 நிமிடம் நீடித்தது. அப்போது, 16 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று உத்தரவிட்ட ஆணையின்படி அணையின் நீர்மட்டத்தை 13அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளவும், கேரள அரசு கொண்டு வந்த கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்சேமிப்பு( திருத்தம்) சட்டம் 2006 திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேரள அரசை அறிவுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி மத்திய தொழில் பாதுகாப்பு படையை அங்கு நிறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தேசிய பேரிடர் ஆணையத்தின் நிபுணர் குழு அமைக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்திற்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் தொடர்ந்து அதே போன்று வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். மேலும், மாதந்தோறும் ஒதுக்கப்படும் மண்எண்ணெயையும் அதே அளவு வழங்கிட வேண்டும்.
மாநில அரசு தான் மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறது. மக்களுக்கான மிக முக்கியமான நலத்திட்டங்களை தீட்டி அமல்படுத்துவதும் மாநில அரசுகள் தான். எனவே, தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலினால் தமிழகத்தில் மீனவர் சமூகத்துக்கு இடையே பெரும் கொந்தளிப்பு உள்ளது. சுமார் 30 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தேசிய பிரச்னையாக எடுத்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசுடன் ஜனவரி 2012ல் பேச்சு நடத்தப்பட உள்ளது. அப்போது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பிரச்னையை வலுவாக எடுத்து அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். பாக்ஜலசந்தியில் பரம்பரையாக மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
மீன்பிடித்துறைமுகங்களின் முகத்துவாரங்களை சீரமைக்க ஒவ்வொரு ஆண்டும் ஸீ10 கோடி கொடுத்து உதவ வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இது குறித்து எந்தபதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
தமிழக அரசு வருவாய் பற்றாக்குறை 3 ஆயிரம் கோடிக்கு உள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் சுமை உள்ளது. பல்வேறு கடுமையான நடவடிக்கை எடுத்த பிறகும் மாநில அரசு பல்வேறு நிதி சிக்கலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக வளர்ச்சி பணிகள் பாதிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானியம் அல்லது மற்ற வளர்ச்சி பணிகள் கட்டமைப்புகள் என்ற அடிப்படையில் சிறப்பு சலுகையாக மேற்கு வங்க அரசுக்கு சமீபத்தில் மத்திய அரசு உதவி செய்துள்ளது. அதே போன்று நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு 2007&2008 முதல் 2010&11 வரையிலான ஆண்டுகளுக்கான வருவாய் இழப்பு ஸீ6497.62 கோடி. இதில், மத்திய அரசு 2636. 50 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. விரைவாக முடிவு எடுத்து மீதியுள்ள நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஸீ40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சமாளிக்க முடியாத கடன் தொகை 50 ஆயிரம் கோடி உள்ளது. எனவே, சிறப்பு நிதி உதவி கொடுத்து மின்பயன்பாட்டை சீரமைக்க வேண்டும்.
மரபு சாரா எரிசக்திக்காக மானியம் 455.16 கோடியை உடனடியாக அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் 1500 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. எனவே, மத்திய தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகாவாட் உடனடியாக வழங்கிட வேண்டும்.
12வது திட்டக்காலத்திற்கு தொடங்க உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்கிட முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment