Monday,December,26,2011இலங்கை::தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவத்தில் பிரதம மந்திரி தி.மு. ஜயரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.
இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறும் இப்பிரதான வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 7வது வருடமாக நடைபெறும் இந்த தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெறும். இந்த தேசிய வைபவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இன்றைய இந்த தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் தேசியக் கொடி, அனர்த்த முகாமைத்துவக் கொடி, கிழக்கு மாகாணக் கொடி, மாவட்டக்கொடி என்பன ஏற்றி வைக்கப்ப டுவதுடன் இரண்டு நிமிட நேரம் மெளனப் பிரார்த்தனையும் நடைபெறும்.
அத்தோடு முப்படை வீரர்களின் அணிவகுப்பு, மட்டக்களப்பு மாவட்ட த்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களின் அணிநடை, பேண்ட் வாத்தியம், கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.
No comments:
Post a Comment