Sunday, December 25, 2011

இன்று மாலை 7.00 மணியளவில் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மன்மோகன்சிங்!

Sunday, December 25, 2011
சென்னை:2 -நாள் சுற்றுப்பயணமாக இன்று மாலை 7.00 மணியளவில் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மன்மோகன்சிங். அவரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ரோசையா, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் தி.மு.க. மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் அவரை வரவேற்றனர். பிரதமர் சென்னையில் நாளை கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

சென்னை: 2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மன்மோகன் சிங், நாளை காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கணித மேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்தநாளையொட்டி நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரசுடன் தொடர் மனக்கசப்புத்தான் ஜெ., வுக்கு உண்டு. குறிப்பாக கூடன்குளம், இலங்கை தமிழர் பிரச்னை, முல்லைபெரியாறு அணை விவகாரம், உணவு பாதுகாப்பு மசோதா, உள்ளிட்ட விவகாரங்களில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மத்திய அரசுடன் இணக்கம் என்பது எப்போதும் இருப்பதில்லை, சமீபத்தில் கூட மாநிலத்திற்கு உரிய நிதி வழங்காமல் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதி தனது வருத்தத்தை தெரிவித்தார். முல்லை பெரியாறு அணைக்கு மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும் என்பதற்கு பிரதமரிடம் பதிலே வரவில்லை என்றும் ஜெ., கூறியிருந்தார். இது போன்று உள்ளார்ந்த நட்பு இல்லா சூழலில் பிரதமரை நேரில் சென்று வரவேற்க முடிவு செய்துள்ளார் ஜெ., . பிரதமர் மாநிலத்திற்கு வரும்போது அம்மாநில முதல்வர்கள் வரவேற்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. என்றாலும் எதிர் விவகாரங்கள் காரணமாக நான் வரவேற்க மாட்டேன் என்றும் அறிவிக்கலாம், இருப்பினும் பிரதமரை வரவேற்று அத்துடன் தங்களுக்குரிய பிரச்னைகள் குறித்த மகஜர் வழங்க முடிவு செய்திருக்கிறார்.
ஆட்சிக்கு வந்த பிறகு டில்லி சென்ற ( ஜூன் 13 ) முதல்வர் , பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவும் வழங்கினார். தற்போது சந்திப்பது 2 வதுமுறை. தமிழகத்தில் தி.மு.க,. ஆட்சி மாறி அ.தி.மு.க.,

ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் தமிழகம் வருவது இதுதான் முதன்முறை. தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்திக்கிறார்: சென்னை வரும் பிரதமரை தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு கவர்னர் மாளிகையில் இருக்கலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பின்போது முல்லை பெரியாறு விவகாரம், மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விவாதம் இருக்கும்.

No comments:

Post a Comment