Sunday, December 25, 2011

கிளிநொச்சியில் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகள் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்த இடத்தில் புத்தர்சிலை!

Sunday, December 25, 2011
இலங்கை::கிளிநொச்சியில் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகள் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

கிளிநொச்சியில் 155ஆம் கட்டையில் புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்தது. தற்பொழுது புலிகள் குரல் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவமுகாம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். முகாமிற்கு நடுவில் பெரும் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

2007ஆம் ஆண்டு புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம்மீது இராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்திய பொழுது இசைவிழி செம்பியன் என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment