Sunday, December 25, 2011சென்னை:ஷங்கர்-உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' மிகப் பெரிய வசூலை தந்ததோடு, சமூகத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்காக கமல் தேசிய விருது வாங்கினார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைப் போகிறது என்று கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஷங்கர் நண்பன் படத்தை முடித்து விட்டு தற்போது பட ரிலீசுக்காக காத்துக் கொண்டியிருக்கிறார். அதே சமயம் கமல் 'விஸ்ரூபம்' படத்தில் படு பிசியாக இருக்கிறார். இடையில் கமலை பார்த்து இயக்குனர் ஷங்கர் கதை ஒன்றை சொல்லியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியும் உலக நாயகனிடம் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஷங்கரின் கதை பிடித்து இருப்பதால், அடுத்த படத்தில் கமல் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்திலும் லிங்குசாமியும் உள்ளார். நடிகராக இல்லை.. தயாரிப்பாளராக லிங்குசாமி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் எவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. நண்பன் ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் சில மாதங்கள் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment