Monday, December 05, 2011இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் அரசு கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெற்று வரும் பேச்சுகளில் எட்டப்படும் இணக்கப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால் இருதரப்புமே அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் காலம்தான் கடத்தப்படும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.இதுகுறித்து கருத்துதெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற பற்று அரசிடம் இல்லை.
கூட்டமைப்புடன் அரசு இதயசுத்தியுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. காலத்தை இழுத்தடிப்பதே அரசின் நோக்கமாகவுள்ளது.இந்தியாவையும்,சில மேற்குலக நாடுகளையும் திருப்திப்படுத்தவே அரசு கூட்டமைப்புடன் பேச்சுகளை முன்னெடுக்கின்றது.
13 ஆவது அரசமைப்புத் திருத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கப்படும் என அரச தரப்பினர் தேர்தல் காலங்களில் மாத்திரமே இணக்கம் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களுக்கு அதிகாரப் பரவலை வழங்குவதற்கு அரசுக்குள்ளே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.ஜாதிக ஹெல உறுமய இந்த விடயத்தில் கடும்போக்கில் செயற்படுகின்றது.அதிகாரப் பகிர்வுக் குறித்து பேச முன்வந்தால் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிடும் என்றும் இதனால் அரசு சிதறி சின்னாப்பின்னமாகிவிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என கிரியெல்ல கூறியுள்ளார்.
No comments:
Post a Comment