Monday, December 05, 2011தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக கருதப்பட்டு அவர்களுடன் பேச்சு நடத்தப்படவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றுக்குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்புக்கு அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் பங்காளிக்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி என்பன அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment