Monday, December 05, 2011சென்னை : தமிழக-கேரள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தமிழக,கேரள வரைபடங்கள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். இவர்கள் பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் எனவும், தமிழகம் அல்லது கேரளாவிற்குள் இவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment