Monday, December 5, 2011

மதுரையிலிருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

Monday, December 05, 2011
மதுரை: மதுரையிலிருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் முதல், நேரடி விமான போக்குவரத்து துவங்க உள்ளது. இதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து, சர்வதேச விமானங்களை இயக்க, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், திருச்சியில் நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கேயை, சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், செயலர் ராஜமோகன், டிராவல்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஸ்ரீராம் சந்தித்தனர்.

மதுரையிலிருந்து இலங்கைக்கு நேரடி விமானம் இயக்குவதன் மூலம் ஏற்படும் பலன்கள், பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கினர். இவ்விமான சேவையை சந்தைப்படுத்துதல் மற்றும் குறைந்த அளவிலாவது பயணிகள் செல்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பை சங்கம் ஏற்கும், என்றனர். இதைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவையை துவக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், நிஷன்தா அவர்களிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment