Monday, December 5, 2011

12 யாசகர்களை படுகொலை செய்த போதைப் பொருள் விநியோகஸ்தகர் கைது!

Monday, December 05, 2011
12 யாசகர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் யாசகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாசகர்களை தாமே படுகொலை செய்ததாக குறித்த போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில வைத்து குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ, கிரிபத்கொட, கொள்ளுபிட்டி, பெஹலியகொட, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, கல்கிஸ்ஸ, கம்பனிதெரு மற்றும் களனி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த யாசகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment