Tuesday, December 6, 2011

இலங்கையில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது- சம்பிக ரணவக்க!

Tuesday, December 06, 2011
இலங்கையில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வீண் பிடிவாதம் பிடித்து புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அழிவுகளையே சந்திக்க நேரிடும் என்றும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கம் காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்று இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டும் என ரணவக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம், அங்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று பேசித்திரிந்தால் தமிழ் மக்களுக்கு என்றும் விடிவு ஏற்படப் போவதில்லை, அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைராக்கியத்துடனும் பிரிவினைவாத சிந்தனைகளுடனும் செயற்படுகின்றனர். வெறும் 4 வீதமான வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு 96 வீதமான பெரும்பான்மைக்கு சவால் விடுவது வேடிக்கையான விடயமாக இருக்கிறது.

புலிகள் ஆயுதமுனையில் போராடியே தோல்வி கண்டனர். இந்த நிலையில் மீண்டும் தனி நாடு தர வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம் என்று பேசுவது மீண்டும் அழிவுக்கே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment