Tuesday, December 06, 2011வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணவனை இழந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குழுநிலை விவாத்துக்கான 5ம் நாள் விவாதத்தின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இன்றுநீர் விநியோக நடவடிக்கைகளுக்கான ஒதுக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன், தற்போது 60 ஆயிரத்துக்கும் அதிகமான கணவனை இழந்த பெண்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.
அவர்களுக்கான உதவி நிவாரண வழங்கல்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
No comments:
Post a Comment