Sunday, December 11, 2011

இறுதிக் கட்ட போரின் போது படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் மீண்டும் நாடு திரும்ப முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Sunday, December 11, 2011
இலங்கை::இறுதிக் கட்ட போரின் போது படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் மீண்டும் நாடு திரும்ப முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கையின் சிங்கள செய்திதாள்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் மறைந்து வாழ்ந்து வரும் இவர்கள், மீண்டும் இலங்கை திரும்ப முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான புலி உறுப்பினர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக விமான நிலையத்தில் விசேட புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment