Sunday, December 11, 2011

பெரியாறு அணையை மீட்போம் என்ற கோஷத்துடன் 50,000 விவசாயிகள் படையெடுப்பு!

Sunday, December 11, 2011
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப் போவதாக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதியில் 50,000 விவசாயிகள் அதிரடியாக திரண்டு, ‘பெரியாறு அணையை மீட்போம்Õ என்ற கோஷத்துடன் போலீசாரின் தடை உத்தரவை மீறி கேரளா நோக்கி சென்றனர். இதனால், எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறில் இப்போது உள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த அரசி யல் கட்சியினர் திடீர் திடீரென அத்துமீறி சென்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கேரள பகுதியில் வேலைக்கு செல்லும் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.
6 நாளாக வாகனங்கள் நிறுத்தம்: தமிழக எல்லையான கம்பம், கூடலூர், போடி பகுதி மக்கள், கேரள அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். கேரளா செல்லும் வாகனங்களை தடுத்தனர். கடந்த 6 நாட்களாக தமிழகத்திலிருந்து குமுளி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்லவில்லை. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இப்பகுதிகளில் நாள்தோறும் உண்ணாவிரதம், கேரள முதல்வர் உம்மன் சாண்டி உருவபொம்மை எரிப்பு, மறியல் நடந்து வருகிறது. இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்லவில்லை.
144 தடை உத்தரவு: தமிழகத்தில் கேரளாவை சேர்ந்த நிறுவனங்கள் ஆங்காங்கே தாக்கப்படுகின்றன.

பொது மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா வில் 144 தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் தடையை மீறி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கூடலூரில் இருந்து பெரியாறு அணையை மீட்போம் என்ற கோஷத்துடன் 500க்கும் மேற்பட்டவர்கள் கேரளா நோக்கி புறப்பட்டனர். அவர்களை தேனி எஸ்பி பிரவீன்குமார் அபினபு தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சர்வ கட்சி கூட்டம்: இதையடுத்து, தேனி கலெக்டர் பழனிச்சாமி தலைமையில், கம்பத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை வாபஸ் பெற மறுத்தனர். இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில், பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். தமிழகத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய அணை கட்டியே தீருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கம்பம், கூடலூர் பகுதி மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். நேற்று காலை 8 மணிக்கு கம்பம் அருகே சுருளிப்பட்டியில் ஐக்கிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 5,000 பேர் ஒன்று கூடினர்.

முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்’ என்ற கோஷத்துடன் அவர்கள் கேரளா நோக்கி புறப்பட்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் போலீசாரை மீறி கம்பத்திற்கு வந்தனர்.
மக்கள் எழுச்சி: ஒவ்வொரு ஊராக செல்லச் செல்ல மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் கம்பத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டத்தை தடுத்து தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், தேனி கலெக் டர் பழனிச்சாமி ஆகியோர் பொதுமக்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினர்.
கலெக்டர், ஐ.ஜி. வேண்டுகோள்:
மக்களிடையே ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் பேசுகையில், ‘‘மக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கிறோம். இதையும் தாண்டி கேரளா செல்ல முயன்றால் எல்லையில் துப்பாக்கிகளுடன் போலீசார் காத்துள்ளனர். அதனால், உயிருக்கு உத்தரவா தம் தரமுடியாதுÓ என மைக்கில் அறிவித்தார். அப்போது போராட்டக்காரர்கள் ‘தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் 13 செக்போஸ்ட்களை அடைக்க வேண்டும். தமிழகத்திலிருந்து பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்Õ என கோஷமிட்டனர்.
இதற்கு பதிலளித்த தேனி கலெக்டர், தேனி மாவட்டத்தில் இருந்து செல்லும் பாதையில் உள்ள 3 செக்போஸ்ட்களை மூட உத்தரவிடுகிறேன். போரா ட்டக்காரர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கிறேன். அமைதியாக திரு ம்பிச் செல் லுங்கள்Õ என்று கேட்டுக் கொண்டார்.

எல்லையில் போலீஸ் குவிப்பு: பேச்சுவார்த்தை நடந்தபோதே, ஏராளமானோர் காட்டுப்பாதைகள் வழியாக குமுளி நோக்கி சென்றனர். அங்கு 100க்கும் மேற்பட்ட கேரள போலீசார் துப்பாக்கி மற்றும் வஜ்ரா வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். மேலும், தமிழக பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருவதாக கேரளாவில் தகவல் பரவியது. அதனால் கேரளத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குமுளி எல்லையில் குவிந்தனர். ஆனால், தமிழகத்தில் இருந்து திரண்டு வந்த கூட்டத்தைக் கண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர்.
இந்நிலையில், குமுளி எல்லைப் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், தேனி கலெக்டர் பழனிச்சாமி, எஸ்பி பிரவீன்குமார் அபினபு ஆகியோர் மக்களை தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் தமிழக, கேரள எல்லையில் கடும் பதற் றம் ஏற்பட்டுள்ளது.

அத்துமீறி நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட கேரள போலீசார் உத்தரவு!

தேனி::தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராம மக்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று குமுளி பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.
தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியும் அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றனர்.

குமுளி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கல் வீசியதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே நுழைந்தவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் உள்ள ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்து விட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த ஒரு மலையாளி வீட்டை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு 10 பேரையும் பிடிக்க வந்தனர். உடனே அவர்களில் 6 பேர் தப்பி ஓடி தமிழக பகுதிக்கு வந்து விட்டனர். 4 பேர் கேரள பகுதி மக்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை பொதுமக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. தப்பி வந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

எனவே, தமிழக மக்கள் யாரும் அப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக எல்லையில் திரண்டிருந்த மக்களிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் எல்லையில் குவிந்துள்ள மக்களை கிராம பகுதிக்கு அனுப்பிவைக்க போலீசார் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்தனர்.

No comments:

Post a Comment