Thursday,December 29, 2011சென்னை: விவிடி எண்ணெய் நிறுவனம், நடிகை காஜல் அகர்வாலின் படத்தை பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் காஜல் அகர்வால் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: விவிடி தேங்காய் எண்ணெய் விளம்பரத்திற்காக கடந்த 29.12.2008ல் என்னிடம் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அதற்கு முரணாக நான் நடித்துள்ள விளம்பர படத்தை ஒளிபரப்புகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு இரண்டரை கோடி நஷ்ட ஈடு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா, விளம்பரத்தில் காஜல் அகர்வாலின் படத்தையோ காட்சிகளையோ பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து காஜல் அகர்வால் மேல் முறையீடு செய்தார். அதில் தனது புகைப்படங்களையும் பயன்படுத்தக்கூடாது என அதில் குறிப்பிட்டிருந்தார். மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பானுமதி, மாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘காஜல் அகர்வால் தொடர்பான புகைப்படங்கள் விளம்பரம் எதையும் விவிடி நிறுவனம் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment