Thursday, December 29, 2011

ஆணைக்குழுவின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர் காலங்களில் புதிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும்:ஜதிக ஹெல உறுமய எச்சரிக்கை!

Thursday,December 29, 2011
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என்று ஜதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையை ஜாதிக ஹெல உறுமய தற்போதும் கடுமையாக எதிர்ப்பதாக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்தஸ்ரீ வர்ணசிங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின்படி செயற்பட்டால் மாத்திரமே தமது ஆதரவு அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வேளையிலும் ஜாதிக ஹெல உறுமய அரசியல் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் ஊடக பேச்சாளர் நிஷாந்தஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஜாதிக ஹெல உறுமைய, அந்த ஆணைக்குழுவின் பரிந்துரையை மாத்திரம் எதிர்க்க முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment