Thursday, December 29, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே இயக்க வேண்டும்: கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!

Thursday,December 29, 2011
செங்கல்பட்டு: இந்து மகாசபா தமிழ்நாடு கிளை சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் வீர். வசந்தகுமார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே இயக்க வேண்டும். இப்பிரச்னையில் மக்கள் விரோத போராட்டத்தை தூண்டி விடும் சக்திகளை கைது செய்ய வேண்டும்.

சிங்கம்பெருமாள் கோயில், சிறுகுன்றம் இடையிலான பஸ் போக்குவரத்தை உடனே இயக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்களுக்கு சாதி சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய மக்கள் பயனடையும் வகையில் கொண்டமங்களம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்Õ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மாநில பொது செயலாளர் கோடம்பாக்கம் ஸ்ரீ, முதன்மை பொது செயலாளர் காமராஜ், அமைப்பு செயலாளர் சுனில் குமார், மகளிர் அணி மாநில தலைவர் பிரியா, மாநில செயலாளர்கள் சந்திரன், செல்வேந்திரன், தலைமை நிலைய செயலாளர் முனுசாமி, இளைஞரணி செயலாளர் வரதன், மஸ்தூர் மகாசபா மாவட்ட தலைவர் தசரதன், தென்மேல்பாக்கம் ஊராட்சி தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment