Thursday,December 29, 2011கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் உள்ள கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலைக்கு கப்பல்கள் மூலம் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்காக சித்திரைப்பேட்டையில் சிறிய துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் இருந்து இந்த தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றிக்கொண்டு ஈஸ்ட் மெட்கேஸ் என்ற சரக்கு கப்பல் கடந்த 26-ம் தேதி துறைமுகம் அருகே வந்தது. கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக கப்பலால் துறைமுகத்துக்கு வர முடியவில்லை. இதனால் துறைமுகத்தில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.
அதில் கேப்டன், மாலுமிகள் உள்பட 20 பேர் உள்ளனர். துறைமுக அதிகாரிகளுடன் கப்பல் கேப்டன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், தானே புயல் காரணமாக கடலில் எழும்பும் ராட்சத அலைகளால் கப்பல் தத்தளித்து வருகிறது. பயங்கர புயலை எதிர்நோக்கியுள்ள நிலையில், கப்பலில் உள்ள 20 பேரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment