Thursday,December 29, 2011இலங்கை::ஹெரோயின் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் மொரட்டுவை பிரதேசத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 20 வயதான இளம் பெண் ஒருவர் அடங்குவதாகவும் அவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நீண்டகாலமாக இந்த சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment