Sunday, December 4, 2011

வர்த்தக நிலைய திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது!

Sunday, December 04, 2011
வர்த்தக நிலையங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மாரவில மற்றும் கொழும்பிலிருந்து காலி வரையான வீதிகளின் இரு மருங்கிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் சந்தேகநபர்கள் பொருட்களை திருடிவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment