Sunday, December 4, 2011

ரஷ்யப் பாராளுமன்றத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்குப் பதிவு கொழும்பிலும்!

Sunday, December 04, 2011
ரஷ்யப் பாராளுமன்றத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்குப் பதிவு இன்று ஆரம்பமானது.

ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கம்ச்செட்டிகா மற்றும் ச்சூகோடிகா ஆகிய பிரதேசங்களுக்கான வாக்குப் பதிவு இன்று இடம்பெற்று வருகின்றது.

ரஷ்யாவில் 96 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களிலும், 140 நாடுகளில் அமைக்கப்பட்ட 369 வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் நடைபெறுகின்றது.

இதற்கமைய, இலங்கைக்கான வாக்களிப்பு நிலையம் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள ரஷ்ய வாக்காளர்களுக்கு வாக்குகளைப் பதிவு செய்வதற்காக இன்று நண்பகல் 12 மணியிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ரஷ்ய பாராளுமன்றத்திலுள்ள 450 ஆசனங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வகையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் ஏழு கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் 11 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் அந்த எண்ணிக்கை ரஷ்ய சனத் தொகையில் 55 வீதமாகும்.

இதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உபவேந்தர்களுக்கான அடுத்த மாநாட்டை ருஹூணு பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment