Sunday, December 25, 2011இலங்கை::சர்வதேச அனர்த்தக்குழுவின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கு கிழக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது எனவும், பெண்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெண்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட வேண்டுமென இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment