Sunday, December 25, 2011

கறுப்புக்கொடி அறிவிப்பு எதிரொலி பிரதமர் இன்று வருகை 6,000 போலீஸ் குவிப்பு!

Sunday, December 25, 2011
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்பு பணிக்காக, சென்னையில் 6,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், மத்திய அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், 2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார்.
இதற்கிடையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, சென்னையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்...

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பிரதமரிடம் இன்று ஜெயலலிதா நேரில் முறையீடு!

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுகிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் சென்னை மற்றும் காரைக்குடியி் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று மாலை 7 மணியளவில் சென்னை வரும் அவர் இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார்.

விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போதுமுல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி முறையிடவுள்ளார்.

கேரளாவில் தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் கேரளத்தின் பிடிவாதம் குறித்தும் அவர் பிரதமரிடம் புகார் செய்யவுள்ளார்.

இதேபோல உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் அவர் பிரதமரிடம் நேரில் எதிர்ப்பு தெரிவிக்கபள்ளார்.

இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நாளை காலை 10 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு அரங்கில் நடைபெறும் கணிதமேதை ராமானுஜத்தின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சி சென்று அங்கிருந்து காரைக்குடி பயணப்படுகிறார். அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுஜம் ஆய்வு மையத்தை அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர் இன்னொரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருச்சி திரும்பி அங்கிருந்துடெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

No comments:

Post a Comment