Saturday, December 10, 2011இலங்கை:பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்கள் யுத்தம் இடம்பெற்ற சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஹோவர்ட் தெரிவித்துள்ளார்.
எனினும், ரிச்சர்ட் ஹோவார்ட்டின் கருத்து தவாறானது என ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால், சில பகுதிகளுக்கு எவரையும் அனுமதிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் இதுவரையில் நிலக்கண்ணி வெடிகளினால் எவரும் உயிரிழக்கவில்லை எனவும், யுத்த வயலத்தில் மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதி செய்வது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிச்சர்ட் ஹோவர்ட்டின் கருத்து ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேச மக்களுக்கு புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் கடலுக்கு தொலைவில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்க முடியாது என மக்கள் அதிருப்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் மிகவும் ஒழுக்கத்துடன் யுத்தத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment