Saturday, December 10, 2011இலங்கை: மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமை செயற்பத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மனித உரிமை செயற்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அழுத்தங்களுக்காக தேசிய மனித உரிமை செயற்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு முன்னர் சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் மனித உரிமை செயற்திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment