Saturday, December 3, 2011

இலங்கை தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியமை தொடர்பில் ஏ.பி.சிக்கு எதிராக முறைபாடு!

Saturday, December 03, 2011
இலங்கை தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியமை தொடர்பில், ஒஸ்ட்ரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மீது அமெரிக்காவை தளமாக கொண்ட இலங்கை ஊடக கண்காணிப்பகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை தொடர்பிலான இந்த நிகழ்சியில், ஜனாதிபதி மகிந்தராஜபக், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதுவர் பாலித்த கோஹன்ன மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மீனா கிருஷ்ணமூர்த்தி என்பவர், தாம் வன்னியில் வைத்தியசாலை ஒன்று தாக்கப்படுவதை கண்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த ஊடக கண்காணிப்பகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இந்தி செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment