Saturday, December 03, 2011புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீடு முடிவை மாற்ற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவைச் சந்தித்து, மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் பின்வாங்க முடியாது என்று அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிவிட்டார். வணிகர்களின் ஆட்சேபங்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு ஆனந்த் சர்மா கூறியுள்ளதாகவும், இது தொடர்பாக கூட்டுக்குழு அமைக்க அரசு முன்வந்திருப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment