Saturday, December 3, 2011

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் நடமாடும் சேவை!

Saturday, December 03, 2011
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் சேவ் த சில்ரன் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் இன்று காலை மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்குகொண்டனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் நவரட்ண திஸாநாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய தலைவி திருமதி மாமவதி சிவசுப்ரமணியம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வறிய மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் பாடசாலை உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment